FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காவிரி பிரச்னையில் தமிழகத்துக்கு நீதி மறுப்பு: பழ.நெடுமாறன்

காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கான நீதியை உச்சநீதிமன்றம் மறுத்துள்ளதாக, தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

30 ஜனவரி 2024, 6:30 pm IST
பகிர்:

காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கான நீதியை உச்சநீதிமன்றம் மறுத்துள்ளதாக, தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: 
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆதாயம் தேடுவதற்காக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் பாஜக அரசு காலம் கடத்தியதைக் கண்டிக்க வேண்டிய உச்ச நீதிமன்றம், அதற்குத் துணை நின்றதன் மூலம் தமிழக மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது.
நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் தீர்ப்புகளை மீறியுள்ள கர்நாடக அரசைக் கண்டிக்கவும் உச்ச நீதிமன்றம் தவறிவிட்டது. இதன் மூலம் நீதி முறையும், தேசிய ஒருமைப்பாடும் கேலிக்கூத்தாக்கப்பட்டுவிட்டன என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments