FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நீர்வரத்து அதிகரிப்பு: சுருளி அருவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

தற்போது பெய்து வரும் மழையால் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும், கோடை விடுமுறை என்பதாலும் சுற்றுலாப் பயணிகள் அங்கு குவிந்து வருகின்றனர். இங்கு

30 ஜனவரி 2024, 6:30 pm IST
கோடை விடுமுறையை முன்னிட்டு, கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலை மோதியது.
பகிர்:

தற்போது பெய்து வரும் மழையால் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும், கோடை விடுமுறை என்பதாலும் சுற்றுலாப் பயணிகள் அங்கு குவிந்து வருகின்றனர். இங்கு புதன்கிழமை அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து மகிழ்ந்தனர்.
காலையில் இருந்தே சுற்றுலாப் பயணிகள் சுருளி அருவிக்கு வரத் தொடங்கினர். அவர்கள் வந்த கார் மற்றும் வேன்கள் அருவியின் நுழைவு பகுதியிலிருந்து சுருளிப்பட்டி செல்லும் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டன. வனத்துறையினர் பாலிதீன் பைகள் மற்றும் ஷாம்பு பாக்கெட்டுகளை சுற்றுலாப் பயணிகள் கொண்டு செல்வதை தடுக்க சோதனை நடத்தினர். சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவு அடர்ந்த வனப்பகுதியில் நடந்து சென்ற சுற்றுலாப் பயணிகள் இயற்கையை ரசித்துக் கொண்டே அருவிப் பகுதிக்கு சென்றனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் மேகமலை வன உயிரின சரணாலய ஊழியர்கள் வரிசையாக நிற்க வைத்து குளிக்க அனுமதித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments