FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குட்கா ஊழல் வழக்கு: கிடங்கு உரிமையாளர்கள் உள்பட 5 பேர் கைது

குட்கா ஊழல் வழக்குத் தொடர்பாக கிடங்கு உரிமையாளர்கள் உள்பட 5 பேரை சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை கைது செய்தனர்.

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:


குட்கா ஊழல் வழக்குத் தொடர்பாக கிடங்கு உரிமையாளர்கள் உள்பட 5 பேரை சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை கைது செய்தனர்.
தமிழகத்தில் தடை விதிக்கப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனையை லஞ்சம் பெற்றுக் கொண்டு அதிகாரிகள் அனுமதித்தனர்.
கடந்த 2016-இல் வருமான வரித்துறையினர் சென்னை செங்குன்றம் பகுதியில் குட்கா கிடங்கில் சோதனை நடத்தினர். குட்கா விற்பனைக்கு லஞ்சம் வாங்கியதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை காவல்துறை ஆணையராக அப்போது இருந்த இப்போதைய டிஜிபி தே.க. ராஜேந்திரன், சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்டோர் பெயர்கள் கொண்ட டைரி கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
இவ்வழக்கை, சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணைக்குப் பின் கடந்த 31-இல் செங்குன்றம் குட்கா கிடங்குக்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஜார்ஜ் வீட்டில் 25 மணி நேரம் சோதனை: அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி தே.க.ராஜேந்திரன், சென்னை காவல்துறை முன்
னாள் ஆணையர் எஸ். ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரது வீடுகள் உள்பட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினர். இச்சோதனை ஜார்ஜ் வீட்டை தவிர பிற இடங்களில் இரவுக்குள் நிறைவடைந்தது. ஜார்ஜ் வீட்டில் மட்டும் இச்சோதனை வியாழக்கிழமை காலை 8 மணி வரை நீடித்தது. சோதனையின் முடிவில் ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
5 பேர் கைது: இந்நிலையில் வழக்கின் முக்கிய எதிரிகளான மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி பி.செந்தில்முருகன், மத்தியல் கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன் ஆகிய 5 பேரை சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை கைது செய்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 5 பேரையும், நீதிபதி திருநீலபிரசாத் செப். 20-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதையடுத்து 5 பேரும் புழல் சிறைக்கு சிபிஐ அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இடைத் தரகர்களிடம் விசாரணை: வழக்கில் மாதவராவிடம் இடைத் தரகர்களாக செயல்பட்ட நந்தக்குமார், ராஜேந்திரன் ஆகிய இருவரிடமும் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல் ஆய்வாளர் வீட்டுக்கு சீல்
குட்கா வழக்கில் சிக்கியுள்ள தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சம்பத்குமாரின் ராயபுரம் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அவர் சென்னை செங்குன்றத்தில் பணியில் இருந்தபோது சென்னை ராயபுரம் மேற்கு மாதா கோயில் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டது. தூத்துக்குடிக்கு மாற்றலாகிச் சென்றாலும் இன்னும் அவர் இந்த வீட்டைக் காலி செய்யவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments