திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலுக்கு அதிமுக பொறுப்பாளர்கள் நியமனம்
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பணிகளுக்காக அதிமுக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பணிகளுக்காக அதிமுக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதிகள் மற்றும் திருப்பரங்குன்றம் ஒன்றியம் என பொறுப்பாளர்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமிஆகியோர் நியமித்துள்ளனர். இதற்கான அறிவிப்பு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
அதன்படி கூட்டுறவுத்துறை அமைச்சரும், மாநகர் மாவட்ட அதிமுக செயலருமான செல்லூர் கே.ராஜூ திருப்பரங்குன்றம் பகுதிக்கு உள்பட்ட 5 வார்டுகளுக்கும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரும், ஜெயலலிதா பேரவை மாநில செயலருமான ஆர்.பிஉதயகுமார் அவனியாபுரம் பகுதிக்கு உள்பட்ட 5 வார்டுகளுக்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிமுக புறநகர் மாவட்ட செயலரும், வடக்கு சட்டப்பேரவை உறுப்பினருமான வி.வி.ராஜன்செல்லப்பா திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்கு உள்பட்ட 38 ஊராட்சிகளுக்கும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதியில் இதுவரை நடைபெற்ற 14 தேர்தல்களில் 8 முறை அதிமுகவும், 2 முறை அதிமுக ஆதரவு பெற்ற வேட்பாளர்களும் வெற்றிபெற்றுள்ளனர். இதனை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக அதிமுக தேர்தல் களத்தில் முதலாவதாக களம் இறங்கி தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.