முகப்பு
தமிழ்நாடு

காங்கிரஸ் பேரியக்கத்தின் சிறப்பான பணியினை எந்த சக்தியும் நீக்கி விட முடியாது: சோனியாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து 

காங்கிரஸ் பேரியக்கத்தின் சிறப்பான பணியினை மக்களின் இதயங்களை விட்டு எந்த சக்தியும் நீக்கி விட முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Updated On : 2 ஜூன் 2019, 4:38 pm IST
பகிர்:

சென்னை: காங்கிரஸ் பேரியக்கத்தின் சிறப்பான பணியினை மக்களின் இதயங்களை விட்டு எந்த சக்தியும் நீக்கி விட முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

காங்கிரஸ் பேரியக்கத்தின் நாடாளுமன்ற குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மரியாதைக்குரிய அன்னை திருமதி சோனியா காந்தி அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதய பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

Advertisement

அரசியல் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள பன்முகத்தன்மை, மதசார்பின்மை, சமூக நீதி, சமத்துவம் மற்றும் ஏழை எளிய நடுத்தர விளிம்பு நிலை மக்களின் நம்பிக்கை ஆகியவற்றிற்கு நிரந்தர உத்தரவாதமாகத்  திகழும் காங்கிரஸ் பேரியக்கத்தின் சிறப்பான பணியினை, இந்திய மக்களின் நல்இதயங்களை விட்டு என்றும் - எந்த சக்தியும் நீக்கி விட முடியாது.

இவ்வாறு அவரது பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments