காலமானார் பேராசிரியர் மா.ரா. அரசு
பேராசிரியர் மா.ரா. அரசு(71) இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை காலமானார். இவர் தமிழறிஞர் டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் மகன்.
பேராசிரியர் மா.ரா. அரசு(71) இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை காலமானார். இவர் தமிழறிஞர் டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் மகன்.
முப்பத்தைந்து ஆண்டுகள் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிந்தவர் மா.ரா. அரசு. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து இந்திய விடுதலைக்கு முந்தைய தமிழ் இதழ்கள், திராவிட இயக்க இதழ்கள், தமிழ் ஆய்வு இதழ்கள், பொதுவுடைமை இயக்க இதழ்கள், தமிழ் இலக்கிய இதழ்கள், தமிழ் இதழியல் என்னும் தலைப்புகளில் பதினொரு கருத்தரங்குகளை நடத்தியதிலும், அக் கருத்தரங்கத் தொகுதிகளை அச்சிட்டதிலும் பெரும் பங்கு மா.ரா. அரசுவைச் சேரும்.
வ.உ.சி.-யைப் பற்றிய ஆய்வின் மூலம் அவர் முனைவர் பட்டத்தைப் பெற்றார். மேலும், எழுத்தாளராக பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
Advertisement
Advertisement
இதயநோய்-க்கு சிகிச்சை பெற்று வந்த அவர் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மாரடைப்பால் காலமானார்.
அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். செவ்வாய்க்கிழமை பகல் 11 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்புக்கு: 9940165040
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.