மேக்கேதாட்டுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து கீழையூரில் கண்டன ஆர்ப்பாட்டம்
கீழையூரில், விவசாய சங்கம் சார்பில் மேக்கேதாட்டுவில், அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை காலை நடைபெற்றது.
கீழையூரில், விவசாய சங்கம் சார்பில் மேக்கேதாட்டுவில், அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை காலை நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், கீழையூர் கடைத்தெரு பகுதியில் மேக்கேதாட்டுவில் சட்டவிரோதமாக அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், அதற்கு துணைப் போகும் மத்திய அரசைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கே. கிருஷ்ணன் தலைமை வகித்தார். விவசாய சங்க மாவட்ட செயலாளர் கோவை.சுப்பிரமணியன் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஏ. முருகையன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார்.
Advertisement
Advertisement
உடன் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ஏ.உமாநாத், விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினர்கள் எம். ரவி, ஆர். அன்பழகன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் டிக்ஷ வெங்கட்ராமன், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஊனமுற்றோர்கள் பாதுகாப்பு நல சங்கத்தின் ஒன்றிய செயலாளர் என். பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், மேக்கேதாட்டுவில் சட்டவிரோதமாக அணை கட்ட முயற்சிப்பதை கைவிட வேண்டி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.