ஆற்காடு ஒன்றிய அதிமுக சார்பில் பொன்விழா
ஆற்காடு ஒன்றிய அதிமுக சார்பில் கட்சியின் 50 ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டம் ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றிய அதிமுக சார்பில் கட்சியின் 50 ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டம் ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு ஆற்காடு ஒன்றியச் செயலாளர்கள் வளவனூர் எஸ். அன்பழகன்,(கிழக்கு), தாழனூர் என். சாரதி ஆகியோர் தலைமை வகித்தனர்.
ராணிபேட்டை மாவட்டச் செயலாளர் அரக்கோணம் சு.ரவி எம்எல்ஏ கலந்து கொண்டு எம்ஜிஆர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் மாவட்ட இணைச் செயலாளர் கீதா சுந்தர், ஒன்றிய அவைத் தலைவர்கள் அரங்கநாதன், வேப்பூர் ஏ.எஸ். மணி, ஒன்றிய துணைச் செயலாளர் எஸ்.ஆர் சங்கர், ஒன்றியக் குழு உறுப்பினர் காஞ்சனா சேகர், ஜெயகாந்தன், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணி பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.