ராஜிவ் கொலை வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரிய பேரறிவாளனின் மனு டிச.7-ல் விசாரணை
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் அளித்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் அளித்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார் பேரறிவாளன். ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் ஆளுநர் இதுகுறித்து முடிவெடுக்காமல் உள்ளார்.
இந்நிலையில் ராஜிவ் கொலை வழக்கு விசாரணையில் தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், வழக்கினை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற பேரறிவாளனின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் வருகிற டிசம்பர் 7 ஆம் தேதி இந்த வழக்கினை விசாரிக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.