முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் அக்.16 பள்ளிகளுக்கு விடுமுறை: தமிழக அரசு

தமிழகத்தில் வரும் சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வி ஆணையர் புதன்கிழமை அறிவித்துள்ளார்.

Updated On : 13 அக்டோபர் 2021, 6:26 pm IST
பள்ளிக்கல்வித்துறை
பகிர்:

தமிழகத்தில் வரும் சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வி ஆணையர் புதன்கிழமை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்ட செய்தியில்,

பல்வேறு ஆசிரியர் சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் வாரத்தில் 6 நாள்கள் செயல்பட்டு வருவதாகவும் மாணவர்கள் விடுப்பின்றி பள்ளிக்கு வருகை புரிகின்றனர் என்றும், கணிசமான ஆசிரியர்கள் தங்களது சொந்த மாவட்டங்களிலிருந்து தொலைதூரத்தில் பணிபுரிந்து வருகின்றனர் என்றும், செப். 14 மற்றும் 15 ஆகிய இரு நாள்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வார இறுதி நாளான சனிக்கிழமை செப்.16 அன்று விடுமுறை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி செப். 16 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments