இவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்: காவல்துறை தகவல்
மோசடிகள் பல விதம், அதில் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்பது போல நாள்தோறும் புதிது புதிதாக மோசடிகள் உருவாகி வருகின்றன.
சென்னை: மோசடிகள் பல விதம், அதில் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்பது போல நாள்தோறும் புதிது புதிதாக மோசடிகள் உருவாகி வருகின்றன.
மக்களுக்கு காவல்துறை என்னதான் எச்சரிக்கைகளை அளித்தாலும், ஆசையோ, அதிகப் பணமோ, ஏதோ ஒன்று ஏற்படுத்தும் விருப்பத்தால் மக்கள் அவர்களை அறியாமல் ஏமாந்துவிடுகிறார்கள். பிறகுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வருந்துகிறார்.
அதற்காகவே, புதுவிதமான மோசடிகள் வந்ததும் அது குறித்து காவல்துறையினரும் சமூக வலைத்தளங்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்கலாமே.. 'எண் ஒன்றை அழுத்தவும்': இந்த மோசடி எச்சரிக்கை உண்மையில்லை
தற்போது வெளியிடப்பட்டிருக்கும் எச்சரிக்கைத் தகவலில், நீங்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்ததாகவோ அல்லது நிறுவன விளம்பரத்திற்காகவோ இலவசமாக அல்லது குறைந்த விலையில் பொருள்களை விற்பனை செய்ய வந்ததாக கூறும் நபர்களை கண்டிப்பாக வீட்டினுள் அனுமதிக்காதீர்கள்.
அவ்வாறு செய்தால், உங்களின் உடைமைகளையோ அல்லது குழந்தைகளையோ இழக்க நேரிடும், விழிப்புடன் இருக்கவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.