தமிழகத்தில் புதிதாக 1,682 பேருக்கு கரோனா; 21 பேர் பலி
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,682 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 21 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,682 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 21 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் நேற்று 1,647 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை (செப்.21) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
Advertisement
Advertisement
புதிதாக 1,682 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 26,50,370-ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு நாளில் மட்டும் பலி எண்ணிக்கை 21-ஆக அதிகரித்துள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,400-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவிலிருந்து 1,627 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 25,97,943-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 17,027 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாளில் மட்டும் 1,51,260 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக பாதிப்பு....
தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 235 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூரில் மீண்டும் கரோனா அதிகரித்துள்ளது. இன்று 101 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்ச பாதிப்புகள்...
கோவை - 235
சென்னை - 194
ஈரோடு - 130
செங்கல்பட்டு - 110
திருப்பூர் - 101
சேலம் - 98
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.