முகப்பு
தமிழ்நாடு

தூத்துக்குடி அருகே கார் கவிழ்ந்து விபத்து: 2 பெண்கள் பலி

தூத்துக்குடி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் உயிரிழப்பு.

Updated On : 28 ஆகஸ்ட் 2022, 11:29 am IST
தூத்துக்குடி அருகே கார் கவிழ்ந்து விபத்து: 2 பெண்கள் பலி
பகிர்:

தூத்துக்குடி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பெத்து ரெட்டிபட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவர் தனது மனைவி சங்கரேஷ்வரி (62) உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களுடன் ஞாயிற்றுக்கிழமை காலை திருச்செந்தூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். 

தூத்துக்குடி அருகே உள்ள குறுக்குச்சாலை பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென டயர் வெடித்து, நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

Advertisement

Advertisement

இதில், காரில் பயணம் செய்த பழனிசாமியின் மனைவி சங்கரேஷ்வரி, அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த  மருதாயி (55) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், பழனிசாமி, அவரது  மகன் கனக தர்மராஜ், மருமகள் முத்துலட்சுமி, குழந்தைகள் ஓவியா , நிவிட் குரு, கார் ஓட்டுநர் சங்கர் ஆகியோர் காயம் அடைந்தனர். விபத்து குறித்து ஓட்டப்பிடாரம் காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments