மாண்டஸ் புயலினால் சென்னையில் இவ்வளவு கழிவுகளா! மாநகராட்சி தகவல்!
மாண்டஸ் புயலினால் சென்னை மாநகராட்சியில் சுமார் 140 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மாண்டஸ் புயலினால் சென்னை மாநகராட்சியில் சுமார் 140 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் சென்னையில் நேற்று கரையை கடந்தது. இந்த புயலினால் சென்னை முழுவதும் கழிவுகள் அதிகமானது. தண்ணீர் தேங்காமல் மாநகராட்சி உழியர்கள் இரவோடு இரவாக இந்தப் பணியில் ஈடுபட்டார்கள்.
1 முதல் 8 மண்டலம் வரையுள்ள பகுதிகளில் 47.67 மெட்ரிக் டன் தாவரக் கழிவுகளும், மண்டலம் 9 முதல் 15 வரை 893.42 மெட்ரிக் டன் கழிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது. அடையார் மண்டலத்தில்தான் (33.38 மெட்ரிக் டன்) அதிகபட்ச கழிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
Advertisement
இந்தப் புயலினால் 85 மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டுள்ளன. காவல்துறியினரும் துப்புரவு தொழிலார்களும் இணைந்து மரங்களை அகற்றும் பணியில் ஈடுப்பட்டுதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கத்தை விட 4 மடங்கு அதிகமான கழிவுகளை அகற்றியதாக கிண்டி துப்புறவு தொழிலாளர் தெரிவித்துள்ளார்.