FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

700 காளைகள், 300 காளையர்கள் களம் காணும் மணப்பாறை ஜல்லிக்கட்டு

மணப்பாறை அடுத்த கலிங்கப்பட்டி ஸ்ரீ மாரியம்மன் கோவில் திடலில் ஜல்லிக்கட்டு தற்போது நடைபெறுகிறது.

Updated On : 15 மார்ச் 2022, 2:50 pm IST
700 காளைகள், 300 காளையர்கள் களம் காணும் மணப்பாறை ஜல்லிக்கட்டு
பகிர்:


மணப்பாறை அடுத்த கலிங்கப்பட்டி ஸ்ரீ மாரியம்மன் கோவில் திடலில் ஜல்லிக்கட்டு தற்போது நடைபெறுகிறது. இப்போட்டியினை ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.பழனியாண்டி கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார். 700 காளைகள், 300 காளையர்கள் களம் காணுகின்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கலிங்கப்பட்டி ஸ்ரீ மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவினை முன்னிட்டு ஆலய திடலில் ஜல்லிக்கட்டு தற்போது நடைபெறுகிறது. இதில் மணப்பாறை சுற்றுவட்டார பகுதி மற்றும் அருகாமை மாவட்டங்களில் இருந்து வந்துள்ள 700-க்கு மேற்பட்ட காளைகளும், 300-க்கு மேற்பட்ட காளையர்களும் களம் காணுகின்றனர். ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.பழனியாண்டி கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் பார்வையாளராக கலந்துகொண்டார்.

ஆலயத்தில் ஊர் காளைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின் வாடிவாசலில் அவிழ்க்கப்பட்டதையடுத்து, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட  மாவட்டத்திலிருந்து வந்துள்ள காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியே அவிழ்க்கப்பட்டு வருகிறது. 50, 50 தொகுப்பாக காளையர்கள் களத்தில் உள்ளனர்.

Advertisement

Advertisement

வாடிவாசல் வழியே திமிறி சீறிபாய்ந்த காளைகள் காளையர்களை கலங்கடித்த நிலையில் நின்று விளையாடியது. சில காளையர்கள் தொட்டு கூட பார்க்க முடியாதபடி சீறிபாய்ந்தது. இருப்பினும் சில காளைகளை வீரர்கள் திமில் பிடித்து தழுவினர். காளைகளை பிடித்த வீரர்களுக்கு தங்க காசு, வெள்ளிக்காசு, சைக்கிள், பீரோ, கட்டில், பாத்திரங்கள் என பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. வீரர்களின் கைகளில் பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments