முகப்பு
தமிழ்நாடு

நெல்லையில் உணவகத்தில் தகராறு: இளைஞருக்கு அரிவாள் வெட்டு

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள ஓ.துலுக்கப்பட்டி பகுதியை சேர்ந்த  எடிசன் (23). இவர் மும்பையில் வேலைப்பார்த்து வந்த நிலையில் விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

Updated On : 10 மே 2022, 1:40 pm IST
பகிர்:

நெல்லை: நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள ஓ.துலுக்கப்பட்டி பகுதியை சேர்ந்த  எடிசன் (23). இவர் மும்பையில் வேலைப்பார்த்து வந்த நிலையில் விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் எடிசன் என்பவர் தனது நண்பர்களோடு முக்கூடலில் உள்ள தனியார் உணவகத்துக்கு சாப்பிட சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரேயுள்ள மேசையில்   செண்பகம் என்பவர் தனது குடும்பத்தினரோடு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் எடிசன் மற்றும் அவரது நண்பர்கள் செண்பகத்தின் மனைவியை கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த செண்பகத்திற்கும் ,எடிசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த காட்சியானது அந்த ஓட்டலில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

இதைத் தொடர்ந்து  இருதரப்பினரையும் உணவக ஊழியர்கள் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு சென்ற நிலையில் எடிசனின் ஊருக்கு செண்பகத்தின் அண்ணன் கணேசன் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று எடிசனை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. 

தொடர்ந்து படுகாயமடைந்த எடிசனை அப்பகுதியினர் சிகிச்சைக்காக முக்கூடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பாப்பாக்குடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உணவகத்தில் இரண்டு பேரும் வாக்குவாதம் செய்து சண்டையிடும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.