தமிழகத்தில் புதிதாக 39 பேருக்கு கரோனா: சென்னையில் 19
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 39 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 19 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 39 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 19 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 40 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று பாதிக்கப்பட்டவகளின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த மாதத்தை விட குறைந்தே காணப்படுகிறது.
படிக்க | டிஎன்பிஎஸ்சி தேர்வில் ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை
Advertisement
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 34,54,470-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஒரு உயிரிழப்பு கூட பதிவாகவில்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 38,025 ஆக உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 41 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,16,006-ஆக உயர்ந்துள்ளது.
வீட்டுத் தனிமை மற்றும் மருத்துவமனையில் 439 பேர் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.