FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கட்டுக் கட்டாக ரூ.29 கோடி பணம், 15 கிலோ தங்கம் பறிமுதல்! அதுவும் முன்னாள் பேருந்து ஓட்டுநர் வீட்டில்!

மேற்கு வங்கத்தில் முன்னாள் பேருந்து ஓட்டுநர் வீட்டில், கட்டுக் கட்டாக ரூ.29 கோடி ரொக்கம், 15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 30 ஜூலை 2026, 5:05 pm IST
பணம், தங்கம் பறிமுதல் - கோப்பிலிருந்து
பகிர்:

மேற்கு வங்க மாநிலம் பிர்பம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பேருந்து ஓட்டுநர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.29 கோடி ரொக்கம், ரூ.15 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ரொக்கப் பணத்தை எண்ணி முடிக்க அதிகாரிகளுக்கு பல மணி நேரம் ஆகியிருக்கிறது. புதன்கிழமை காலை சோதனை தொடங்கிய நிலையில், நள்ளிரவைத் தாண்டி பணம் எண்ணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இரண்டு அடுக்குகளைக் கொண்ட வீட்டில், கட்டுக் கட்டாக ரூபாய் நோட்டுகள், தங்கக் கட்டிகள் மற்றும் ரூபாய் நோட்டுகளை எண்ணும் இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த சோதனை எங்கு நடத்தப்பட்டது என்றால், மினர் மண்டல் என்பவரது வீட்டில்தான். இவர் துலு மண்டல் என்ற நவரத்தினக் கற்கள் விற்பனையாளரின் உறவினர். மினர் மண்டல் அரசுப் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றியுள்ளார்.

துலு மண்டல், முன்னாள் திரிணமூல் எம்எல்ஏவும் அண்மையில் ரிதபிரதா பானர்ஜி அணியில் இணைந்தவருமான அனுபிரதா மோண்டலின் நெருங்கிய உதவியாளர் என்று கூறப்படுகிறது.

மினர் மோண்டல் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டவை, துலு மோண்டலுக்குச் சொந்தமானதாகக் கூறப்படுகிறது.

ஒரு சாதாரண பேருந்து ஓட்டுநராக பணியாற்றியவர் வீட்டிலிருந்து அள்ள அள்ளப் பணம், கட்டிக் கட்டியாக தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டது அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

மேலும், துலு மோண்டல் எவ்வாறு இத்தனை கோடி சொத்துகளை சேர்த்திருக்கிறார் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இவர், சட்டவிரோதமாக மணல் அள்ளுதல், கற்களை வெட்டிக் கடத்துதல் போன்ற தொழில்களை செய்து வந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

அண்மையில், மிக பிரமாண்டமாக துலு மோண்டல் தன்னுடைய மகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும், இவர் மீதான விசாரணைப் பார்வை திரும்பக் காரணமாக இருந்துள்ளது.

summary

Bundles of cash worth ₹29 crore and 15 kg of gold seized! And that too, from the home of a former bus driver!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments