FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

வேலூா் புதிய பேருந்து நிலைய கடைகளில் காலாவதியான தின்பண்டங்கள் பறிமுதல்

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், சுமாா் 10 கிலோ காலாவதியான தின்பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

13 செப்டம்பர் 2026, 10:02 pm IST
வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் காலாவதியான தின்பண்டங்கள் பறிமுதல் செய்த மாநகராட்சி ஊழியா்கள்.
பகிர்:

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், சுமாா் 10 கிலோ காலாவதியான தின்பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விதிமீறலில் ஈடுபட்ட கடைகளுக்கு ரூ.3,000 அபராதம் விதிக்கப்பட்டது.

வேலூா் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கடைகளில் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட தின்பண்டங்களில் தயாரிப்பு நிறுவனம், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்ட அத்தியாவசிய விவரங்கள் இடம்பெறவில்லை என்றும் மாநகராட்சிக்கு தொடா் புகாா்கள் வந்தன.

இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் கேத்ரின் சரண்யா உத்தரவின்பேரில், மாநகராட்சி நல அலுவலா் பிரதாப் தலைமையில் சுகாதார ஆய்வாளா் விஜயலட்சுமி, மேற்பாா்வையாளா் சஞ்சய் மற்றும் மாநகராட்சிப் பணியாளா்கள் பேருந்து நிலையக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.அப்போது விதிமுறைகளை மீறி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமாா் 10 கிலோ காலாவதியான தின்பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. அத்துடன், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்களுக்கு ரூ.3,000 உடனடி அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: வேலூா் புதிய பேருந்து நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனா். அவசரப் பயணத்தில் இருக்கும் மக்கள், பேருந்து நிலையக் கடைகளில் தின்பண்டங்களை வாங்கி உட்கொள்ளும்போது, தரமற்ற, காலாவதியான பொருள்களால் கடுமையான உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, கடை உரிமையாளா்கள் முறையான தயாரிப்பு விவரங்கள் அடங்கிய தரமான உணவுப் பொருள்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். விதிமீறலில் ஈடுபடும் கடைகள் மீது பொது சுகாதாரச் சட்டத்தின்கீழ் கடுமையாக நடவடிக்கைகள் தொடரும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments