முகப்பு
தமிழ்நாடு

அத்திக்கடவு அவிநாசி திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும்? நீர்வளத்துறை தகவல்

அத்திக்கடவு அவிநாசி திட்டம் ஜனவரியில் செயல்பாட்டுக்கு வரும் என்று நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 28 அக்டோபர் 2022, 8:15 pm IST
அமைச்சர் துரைமுருகன்
பகிர்:

அத்திக்கடவு அவிநாசி திட்டம் ஜனவரியில் செயல்பாட்டுக்கு வரும் என்று நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தலைமையில் அக்.27 அன்று அத்திக்கடவு அவிநாசி திட்டப் பணிகள் மற்றும் சேலம் மாவட்டம், சரபங்கா வடிநிலத்திலுள்ள ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் தற்சமயம் சுமார் 97 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதில் குழாய் பதிக்கும் பணிகளில் மொத்தம் 1065 கி.மீட்டரில் சுமார் 1033 கி.மீ தூரத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக பணிகள் முடிப்பதில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

இருப்பினும், எதிர்வரும் டிசம்பர் 2022-க்குள் அனைத்து பணிகளும் முடித்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு ஜனவரி மாத இறுதிக்குள் செயல்பாட்டுக்கு கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும், சேலம் மாவட்டம், சரபங்கா வடிநிலத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டத்தில் இதுவரை 87 சதவீதப் பணிகள் முடிவுற்றுள்ளது. மீதமுள்ள பணிகள் எதிர்வரும் 3 மாதங்களில் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் செயலாளர், பிரசாந்த் மு வடநரே, இ.ஆ.ப., நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர், கு.இராமமூர்த்தி, கோவை மண்டல தலைமைப் பொறியாளர் பொ.முத்துச்சாமி, திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர், எஸ். ராமமூர்த்தி மற்றும் நீர்வளத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments