FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அண்ணா பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி மரியாதை

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். 

1 பிப்ரவரி 2024, 3:49 pm IST
பகிர்:

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். 

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாள், தமிழக அரசு சார்பிலும் திமுக, அதிமுகவினர் சார்பிலும் தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை இன்று தொடங்கிவைக்கிறது. 

Advertisement

Advertisement

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் சிலைக்கு கீழ் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்களும், தொண்டர்களும், அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அண்ணா பிறந்தநாளையொட்டி எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ள செய்தி:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments