முகப்பு
தமிழ்நாடு

கோவை தெற்கு தொகுதியில் மீண்டும் மக்களை சந்தித்த கமல்ஹாசன்!

கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட கெம்பட்டிகாலனி பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பொதுமக்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். 

Updated On : 17 செப்டம்பர் 2022, 3:05 pm IST
பகிர்:

கோவை: கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட கெம்பட்டிகாலனி பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பொதுமக்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். 

கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் 1728 வாக்கு வித்தியாசத்தில் கமல்ஹாசன் தோல்வியடைந்தார். அதில் தேர்தல் முடிவுகளில் முன்னிலையில் இருந்த கமல்ஹாசன் கடைசி இரண்டு சுற்றுகளில் கெம்பட்டி காலனி வாக்குகளில் கமல் சரிவை கண்டார்.  வெற்றி வாய்ப்பு வானதிக்கு சென்றது. 

இந்நிலையில் கெம்பட்டி காலனியில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார். பின்னர் மக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது: 

Advertisement

Advertisement

800 குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் கழிவறை இல்லை. எனவே கழிவறை நாங்கள் கட்டிதருகிறோம். தேர்தல் வாக்குறுதிகள் இல்லை. எங்களால் முடிந்த அளவிற்கு செய்கிறோம். 

கிராம சபை தூசித் தட்டி மீண்டும் நடக்க நாங்களும் காரணம் எனவும், அம்மன்குளம் பகுதியிலும் ஆய்வு செய்து மக்களின் தேவையை செய்வோம். இது அரசியலுக்கு அப்பால் பட்ட உறவு,  சமூகத்திற்கான உறவு என்றார். நாங்கள் கட்டி தரும் கழிப்பறை நம்முடைய கழிப்பறை. அதை ஆரோக்கியமான இடமாக நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டும். அதை நான் பார்க்க மீண்டும் வருவேன். அது சுத்தமாக இல்லை என்றால் துடைப்பம் எடுத்து நானே சுத்தம் செய்வேன் என்றார். 

நான்கு கழிப்பறைகள் கட்டிதருகிறோம். கடந்த  எம்.எல்.ஏ தேர்தலில் உங்களை வெற்றி பெற வைத்தோம் என மக்கள் சொல்கிறார்கள். ஆனால் யார் தோற்கடித்தார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்று கூறி மக்களிடம் மனுக்களை வாங்கிக்கொண்டு புறப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments