FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

துணைவேந்தர் நியமன சட்ட மசோதா:  இனி என்ன நடக்கும்?

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

Updated On : 25 ஏப்ரல் 2022, 3:24 pm IST
துணைவேந்தர் நியமன சட்ட மசோதா:  இனி என்ன நடக்கும்?
பகிர்:

சென்னை: தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

துணைவேந்தர் நியமனம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும் வகையில், சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கொண்டு வந்த சட்ட மசோதா விவாதங்களுக்குப் பின் நிறைவேற்றப்பட்டது.

குஜராத், ஆந்திரம், தெலங்கானாவில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசுகளே நியமிக்கின்றன. இந்த நிலையில், மாநில அரசுகளே பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கலாம் என்ற புஞ்சி ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.

இந்த ஆணைய பரிந்துரையை ஏற்று, பல்கலைக்கழக துணைவேந்தர்களை இனி மாநில ஆளுநருக்கு பதிலாக ஆளும் அரசே நியமிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு, விவாதங்களுக்குப் பின் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனால் இனி என்ன நடக்கும்?

இந்தப் புதிய சட்டமசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், இதுவரை ஒரு பல்கலைக்கழகத்துக்கு, தேர்வுக்குழு பரிந்துரைக்கும் மூன்றில் ஒருவரை  மாநில ஆளுநர், துணைவேந்தராக தேர்வு செய்யும் நடைமுறை இருக்காது.

அதற்கு பதிலாக, தேர்வுக்குழு பரிந்துரை மீது தமிழக அரசே முடிவு செய்து, பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கும் என்று கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments