முகப்பு
தமிழ்நாடு

கடலூரில் விழிப்புணர்வு பேரணிக்காக காத்திருந்த 3 மாணவிகள் மயக்கம்

கண்தானம் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு பேரணிக்காக காத்திருந்த 3 மாணவிகள் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு நிலவியது.

Updated On : 26 ஆகஸ்ட் 2022, 11:18 am IST
பேரணிக்கு காத்திருந்த மாணவி மயங்கியதை பார்வையிட்டார் ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம்.
பகிர்:

கடலூர்: கண்தானம் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு பேரணிக்காக காத்திருந்த 3 மாணவிகள் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு நிலவியது.

கடலூர் மாவட்ட நிர்வாகம், மருத்துவத் துறை சார்பில் கண்தானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை காலை விழிப்புணர்வு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 9.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இதற்காக அரசு நர்சிங் கல்லூரி மாணவிகள் சுமார் 150 பேர் காலை சுமார் 8.30 மணிக்கு பேரணிக்காக நிறுத்தப்பட்டனர். காலை 9.45 மணியளவில் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் பேரணியை தொடங்கி வைக்க வந்திருந்தார். அப்போது ஒருவர் பின் ஒருவராக 3 மாணவிகள் மயங்கி சரிந்தனர். அவர்களுக்கு அதே இடத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் தொடங்கி வைக்க பேரணி பாரதி சாலை வழியாக சென்று அரசு மருத்துவமனையை அடைந்தது.

இதுபோன்ற விழிப்புணர்வு பேரணிகளில் மாணவ-மாணவிகளை ஈடுபடுத்துவது தொடர்பாக அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டும் மாணாக்கர்களை ஈடுபடுத்துவது தொடரதான் செய்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments