உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன்பு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது பற்றி...
முதல்வர் விஜய் குறித்து சர்ச்சையாகப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
காவிரி விவகாரம் தொடர்பாக தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து, உதயநிதி ஸ்டாலின் கடுமையாகப் பேசியது சர்ச்சையாகியுள்ளது.
உதயநிதி பேசியதற்கு அமைச்சர்கள், நிர்வாகிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
அதேபோல உதயநிதி மீது தவெக மகளிரணி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் வீட்டின் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவரது வீட்டின் உள்ளே சென்ற காவல்துறையினர், அவரது குடும்பத்தினரிடம் பேசி வருகின்றனர்.
வழக்கறிஞர் வரும் வரை காவல்துறையினர் காத்திருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Udhayanidhi Stalin arrested, Police deployed in force outside his Neelankarai residence
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.