முகப்பு
தமிழ்நாடு

மாண்டஸ் புயலினால் சென்னையில் இவ்வளவு கழிவுகளா! மாநகராட்சி தகவல்!

மாண்டஸ் புயலினால் சென்னை மாநகராட்சியில் சுமார் 140 டன் கழிவுகள்  அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

Updated On : 11 டிசம்பர் 2022, 11:21 am IST
சென்னையில் புயல் நிவாரணப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்
பகிர்:

மாண்டஸ் புயலினால் சென்னை மாநகராட்சியில் சுமார் 140 டன் கழிவுகள்  அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

மாண்டஸ் புயல் சென்னையில் நேற்று கரையை கடந்தது. இந்த புயலினால் சென்னை முழுவதும் கழிவுகள் அதிகமானது. தண்ணீர் தேங்காமல் மாநகராட்சி உழியர்கள் இரவோடு இரவாக இந்தப் பணியில் ஈடுபட்டார்கள். 

1 முதல் 8 மண்டலம் வரையுள்ள பகுதிகளில் 47.67 மெட்ரிக் டன் தாவரக் கழிவுகளும், மண்டலம் 9 முதல் 15 வரை 893.42 மெட்ரிக் டன் கழிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது. அடையார் மண்டலத்தில்தான் (33.38 மெட்ரிக் டன்) அதிகபட்ச கழிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

இந்தப் புயலினால் 85 மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டுள்ளன. காவல்துறியினரும் துப்புரவு தொழிலார்களும் இணைந்து மரங்களை அகற்றும் பணியில் ஈடுப்பட்டுதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கத்தை விட 4 மடங்கு அதிகமான கழிவுகளை அகற்றியதாக கிண்டி துப்புறவு தொழிலாளர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments