முகப்பு
தமிழ்நாடு

கனமழை எதிரொலி: 3 மாவட்டத்திற்கு அரை நாள் விடுமுறை!

கனமழை காரணமாக மூன்று மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 12 டிசம்பர் 2022, 1:06 pm IST
கோப்புப் படம்
பகிர்:

கனமழை காரணமாக மூன்று மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல், மாமல்லபுரத்திற்கு அருகே கடந்த சனிக்கிழமை அதிகாலை கரையைக் கடந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்தது. 

இதையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், இன்று காலை முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆகிய மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்துவருகிறது. இதனால், இந்த 3 மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அந்தெந்த மாவட்ட ஆட்சியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

வேலூர் மாவட்டத்தில் மட்டும் இன்று பிற்பகல் 3 மணிக்குள் வகுப்புகளை முடித்துக்கொள்ளுமாறு பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments