கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களின் கல்வி? அமைச்சர் ஆலோசனை
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
கனியாமூரில் கலவரம் நடைபெற்ற பள்ளியில் பயின்ற மாணவர்களின் கல்வி தொடர்பாக ஆட்சியர் உள்ளிட்ட பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில், பிளஸ் 2 மாணவி மரணம் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரியும், பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
இந்த போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, அப்பகுதியில் காவல் துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மாணவியின் உடலும் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 23ஆம் தேதி இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.
மேலும், சேலம் டிஐஜி பிரவீன்குமார்அபிநபு தலைமையிலான காவல் அதிகாரிகள் மாணவி தற்கொலை செய்துகொண்ட பள்ளியில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், அப்பள்ளியில் பயின்ற மாணவர்களின் கல்வி தொடர்பாக மாவட்ட ஆட்சியருடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.