1973 வரலாற்றுச் சிறப்புமிக்க அரையிறுதிக்குப் பிறகு... வாக்னர் திடலில் மோதும் இந்தியா - பாகிஸ்தான்!
வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்னர் திடலில் மீண்டும் மோதும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து...
1973 வரலாற்றுச் சிறப்புமிக்க அரையிறுதிப் போட்டிக்குப் பிறகு நெதர்லாந்தில் இருக்கும் வாக்னர் ஹாக்கி திடலில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நாளை (ஆக.19) மோதவிருக்கின்றன.
உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி தனது 2-ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 2-4 கோல் கணக்கில் திங்கள்கிழமை தோல்வி கண்டது.
முதல் ஆட்டத்தில் வேல்ஸை வீழ்த்தியை இந்திய அணிக்கு, இந்தத் தோல்வி தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தாக, மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் பாகிஸ்தானை நாளை எதிர்கொள்கிறது.
Advertisement
Advertisement
புள்ளிப் பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியா, பாகிஸ்தானுடனான புதன்கிழமை (ஆக. 19) ஆட்டத்தில் வெற்றி அல்லது டிராவை பதிவு செய்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.
இந்தப் போட்டி வாக்னர் திடலில் நடைபெறுகிறது. முன்னதாக, 1973ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான் மோதியது. இந்தப் போட்டியில் இந்திய அணி 1-0 என வென்றது. இறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் தோற்றாலும் இந்த அரையிறுதி வெற்றி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் 1971ஆம் ஆண்டு போர் நடைபெற்றதால் 1973 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. இது குறித்து முன்னாள் கேப்டன் கணேஷ் பேசியிருப்பதாவது:
உடல்நலனில் மேம்பட்ட இந்திய அணியே அப்போது வெளிநாட்டில் விளையாடியது. நாங்கள் பாகிஸ்தானை வீழ்த்தினாலும் இன்னும் அதிக கோல்கள் அடித்திருக்கலாம் எனத் தோன்றியது. அதில் சுர்ஜித் நல்ல ஃபார்மில் இருந்தார். அந்தத் தொடரில் 9 கோல்கள் அடித்திருந்தார்.
உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் வரலாற்றிலேயே அந்தப் போட்டிதான் மிகவும் சிறந்தது. அந்த அரையிறுதிப் போட்டி திறமைக்கான போராகவே இருந்தது. அந்தக் காலத்தில் யாருடன் விளையாடினாலும் அது களத்தில் நேரடியான போர் மாதிரியே இருந்தது.
1971 போரின் கசப்பு இன்னும் பசுமையாகவே இருக்கிறது. எல்லையில் நாம் எதிரிகளாகவே இருக்கிறோம். களத்திலும் அப்படியே இருக்கிறோம். இருப்பினும் விதிகளுக்கு உள்பட்டே விளையாடுகிறோம்.
நாங்கள் அருகிலேயே ஒருவருக்கொருவர் யாருக்கும் வாழ்த்து சொல்ல மாட்டோம். இரு அணியுமே நன்றாக விளையாடினோம். யாருமே தோற்க விரும்பவில்லை. அது மிகவும் கரடுமுரடான போட்டியாகவே அமைந்தது என்றார்.
Wagener Stadium set for another India-Pakistan clash, 53 years after historic 1973 semifinal
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.