கொடைக்கானல் மலர் கண்காட்சி மே 24ல் தொடக்கம்
மலைகளின் இளவரசி என போற்றப்படும் கொடைக்கானலில், 59வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி மே 24ஆம் தேதி தொடங்கி பத்து நாள்கள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மலைகளின் இளவரசி என போற்றப்படும் கொடைக்கானலில், 59வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி மே 24ஆம் தேதி தொடங்கி பத்து நாள்கள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளதாவது:
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில் மே 24 ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
அதேபோல் சுற்றுலாத்துறை சார்பில் மே 24 முதல் ஜூன் இரண்டாம் தேதி வரை கோடை விழா நடைபெறுகிறது. இதனையொட்டி பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், படகு அலங்கார போட்டி, மீன்பிடி போட்டி, பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
கோடை விழாவில் திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளையும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.