FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இன்றும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி சிறப்பு முகாம்

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமையும் (நவ.27) நடைபெறுகிறது.

Updated On : 27 நவம்பர் 2022, 9:04 am IST
கோப்புப்படம்
பகிர்:

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமையும் (நவ.27) நடைபெறுகிறது. முன்னதாக, சனிக்கிழமையும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்காக, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, வாக்காளர்களின் வசதிக்காக, கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் வாக்குச் சாவடி அமைவிடங்கள் அனைத்திலும் சிறப்பு முகாம்கள் நடந்தன.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், ஆதார் எண் இணைப்பு போன்றவற்றுக்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இரண்டு நாள்களிலும் சேர்த்து மொத்தமாக 7.10 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், சனிக்கிழமை (நவ. 26) தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிலும் ஏராளமான வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக விண்ணப்பங்களை வழங்கினர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. வாக்காளர்கள் தங்களது வாக்கை செலுத்தச் செல்லும் இடங்கள் அனைத்திலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் இந்த முகாம் நடைபெறும். இரண்டு நாள்களிலும் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களின் நிலவரங்கள், மொத்தமாக நான்கு சிறப்பு முகாம்களிலும் பெறப்பட்ட விண்ணப்ப விவரங்கள் ஆகியவற்றை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வரும் திங்கள்கிழமை வெளியிடுவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments