தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவில் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ஒருநாள் பயணமாக தமிழகம் வரவுள்ளார்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவில் கலந்துகொள்ள பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, குருபூஜை விழாவில் கலந்துகொள்ளவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
மேலும் பாஜகவின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் பலரும் இதில் கலந்துகொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | மாணவர்கள் உக்ரைன் செல்ல வேண்டாம்: தமிழக அரசு அறிவுறுத்தல்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.