கோடியக்கரை அருகே நடுக்கடலில் 10 மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு! ஒருவர் படுகாயம்
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மயிலாடுதுறை மீனவர் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மீனவர் படுகாயமடைந்தார்.
ராமநாதபுரம்: கோடியக்கரை அருகே நடுக் கடலில் 10 மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மீனவர் ஒருவர் காலில் குண்டு துளைத்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காரைக்காலில் இருந்து கடந்த 15 ஆம் தேதி ஒரு படகில் 10 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இன்று (அக். 21) நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது ஹெலிகாப்டரில் வந்த கடற்படையினர் படகை நிறுத்த அறிவுறுத்தினர். ஆனால், படகு நிற்காமல் சென்றதால், மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில், 10 மீனவர்கள் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து விமானப்படையினர், ராமநாதபுரம் அருகே உச்சிப்புளியில் கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ் பருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்று காயத்துடன் இருந்த 10 மீனவர்களை அழைத்து வந்து முதலுதவி அளித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இதில், மயிலாடுதுறை மாவட்டம், மாணகிரி பகுதியைச் சேர்ந்த மீனவர் வீரவேல் காலில் குண்டு இருந்ததால் கடற்படையினர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கி சூடு இந்திய கடற்படையினர் நடத்தியதாக காயமடைந்த மீனவர் தெரிவித்த நிலையில், இந்திய கடற்படையினர் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், சிறிய காயமடைந்த 9 மீனவர்கள் கடற்படை முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.