திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடக்கம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் இன்று தொடங்கியது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் இன்று தொடங்கியது.
திருச்செந்தூர் கோயிலில் யாகசாலை திருவிழா பூஜையுடன் திருவிழா தொடங்கிய நிலையில், பக்தர்கள் பச்சை ஆடை உடுத்தி விரதத்தை தொடங்கினர்.
கந்தசஷ்டி திருவிழா முதல் நாளான இன்று சூரிய கிரகணம் இருப்பதால் மாலை 4 மணிக்கு கோவில் நடை மூடப்படும். இரவு 6.45 மணிக்கு நடை திறக்கப்பட்டு மற்ற கால பூஜைகள் நடைபெறும்.
Advertisement
Advertisement
திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 30 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.
கரோனா தொற்றுக்குப் பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இன்று சூரிய கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடல்
செங்கல்பட்டு திருப்போரூர் கந்தசாமி கோயிலிலும் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. வரும் 30 ஆம் தேதி சூரசம்ஹாரமும், 31 ஆம் தேதி திருக்கல்யாணமும் நடக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.