முகப்பு
தமிழ்நாடு

மது போதையில் தகராறு செய்த கணவரை கொலை செய்த மனைவி!

மது போதையில் தகராறில் ஈடுபட்ட  கணவரை கடப்பாரையில் அடித்து கொலை செய்த மனைவி  நத்தம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:31 PM
ராஜேந்திரன்
பகிர்:

மது போதையில் தகராறில் ஈடுபட்ட  கணவரை கடப்பாரையில் அடித்து கொலை செய்த மனைவி  நத்தம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம், கோவில்பட்டி ராஜாகுளம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(40) வெளிமாநிலங்களுக்கு செல்லும் டிப்பர் லாரிகளை ஓட்டி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி பாண்டீஸ்வரி(33) என்ற மனைவியும், 4 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான ராஜேந்திரன் 24 மணி நேரமும் மது போதையில் இருந்ததாகவும், இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த  3 நாட்களாகவே அதிக மது போதையில் இருந்த ராஜேந்திரன் மனைவியிடம் மது வாங்குவதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்து, கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை ராஜேந்திரன் தனது மனைவியை கடப்பாரையைக் கொண்டு தாக்க முயன்ற போது தன்னை தற்காத்துக் கொள்ள மனைவி பாண்டீஸ்வரி கடப்பாரையை பிடுங்கி கணவரை தாக்கியுள்ளார்.இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலை செய்த பாண்டீஸ்வரி நத்தம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த நத்தம் காவல்துறையினர் ராஜேந்திரனின் உடலை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →