கோப்புப் படம் 
தமிழ்நாடு

மார்ச் மாதம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்!

ஜூலை 24ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப்  பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

DIN

ஜூலை 24ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப்  பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

தேர்வு முடிவுகள் குறித்து சமூக வலைதளங்களில் வரும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் டிஎன்பிஎஸ்சி கேட்டுக்கொண்டுள்ளது. 

மொத்தமாக ஸ்கேன் செய்ய வேண்டிய ஓ.எம்.ஆர். விடைத்தாள்களின் எண்ணிக்கை 36 லட்சத்துக்கும் மேலாக உள்ளது. மேலும், பிழைகளை கணினி மூலம் அடையாளம் காண நேரடி அலுவலர் மூலம் உறுதி செய்ய அவகாசம் தேவை எனவும் டிஎன்பிஎஸ்சி குறிப்பிட்டுள்ளது.  எவ்வித தவறுகளுக்கும் இடம்தராமல், குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளது.

ஜூலை 24ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வை 18,36,535 பேர் எழுதியிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT