தமிழகத்தில் கடந்த ஆண்டு 23% கூடுதல் மழை
தமிழகத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு 1,132 மி.மீ. மழை பெய்தது. இது இயல்பை விட 23 சதவீதம் அதிகம்.
தமிழகத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு 1,132 மி.மீ. மழை பெய்தது. இது இயல்பை விட 23 சதவீதம் அதிகம்.
வானிலை மைய கணக்கீடுப்படி தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை ஜூன் 1 முதல் செப்.30 வரை மழைப் பொழிவு இருக்கும். அதேபோல, வடகிழக்கு பருவ மழை அக்.1 முதல் டிச.31 வரை மழைப் பொழிவு நீடிக்கிறது.
2022-இல் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 477 மி.மீ. பெய்தது. இது இயல்பை விட 45 சதவீதம் அதிகம். 2021-இல் 393 மி.மீ. மழை பெய்தது. இது இயல்பை விட 17 சவீதம் அதிகமாக இருந்தது.
Advertisement
Advertisement
வடகிழக்கு பருவமழை 2022-இல் 445 மி.மீ. மழை பெய்தது. இது இயல்பை விட ஒரு சதவீதமே அதிகம். 2021-இல் வடகிழக்கு பருவ மழை 714 மி.மீ. பெய்தது. இது இயல்பைவிட 59 சதவீதம் அதிகம்.
2022-இல் 25 மாவட்டங்களில் இயல்பான அளவு மழை பெய்தது. ஈரோடு, திருப்பத்தூா், நாமக்கல், கோவை, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருப்பூா் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக மழை பெய்தது.
அதேபோல, நாகை, திருவாரூா், தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்சி, அரியலூா் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாக மழை பெய்தது.
வடகிழக்கு பருவமழையை பொருத்தவரை தமிழகத்திலேயே அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் இயல்பை விட 58 சதவீதம் அதிக மழை பெய்தது. மாநிலத்திலேயே திருவாரூா் மாவட்டத்தில்தான் இயல்பை விட 32சதவீதம் குறைவாக பெய்துள்ளது.
சென்னையில்: சென்னையைப் பொருத்தவரையில் 2022-இல் 1,447 மி.மீ. மழை பெய்தது. இது இயல்பை விட 7 சதவீதம் அதிகம். 2021-இல் 2,105 மி.மீ. மழை பெய்திருந்தது. இது இயல்பை விட 57 சதவீதம் அதிகம்.
2022-இல் வடகிழக்கு பருவமழை சென்னையில் 924 மி.மீ. அளவு பெய்தது. இது இயல்பைவிட 15 சதவீதம் அதிகம்.
2021-இல் 1,360 மி.மீ. சென்னையில் மழை பெய்தது. இது இயல்பை விட 74 சதவீதம் அதிகம்.
தென் மேற்கு பருவமழை 2022-இல் இயல்பைவிட 2 சதவீதம் குறைவாக 437 மி.மீ. அளவு பெய்தது. 2021-இல் இயல்பைவிட 9 சதவீதம் அதிகமாக 500 மி. மீ. மழை பெய்தது.
தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக இயல்பைவிட கூடுதலாக மழை பெய்துள்ளது. இதன் காரணமாக நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளதால் வரும் கோடை காலத்தில் தண்ணீா் தட்டுபாடு இருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.