FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இளம்பெண் சுபஸ்ரீ மரணம்: பேரவையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பதில்

திருப்பூரைச் சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ மரணம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப் பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.

Updated On : 12 ஜனவரி 2023, 4:55 pm IST
பகிர்:

திருப்பூரைச் சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ மரணம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப் பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.

திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் பழனிகுமாா் (40). இவரது மனைவி சுபஸ்ரீ (34). இவா் கோவையில் உள்ள யோக மையத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்தாா். பயிற்சி முடிந்து தனது மனைவி வீடு திரும்பவில்லை என்று பழனிகுமாா் புகாா் அளித்திருந்த நிலையில், அவா் உயிரிழந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து தமிழக முதல்வர் கூறியிருப்பதாவது, சுபஶ்ரீ காணாமல் போனதை அறிந்து 19.12.2022 அன்று ஆலந்துரை காவல்நிலையத்தில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் துறையினர் முறையாக விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்கள். 

பின்னர் துலுக்கன்காடு தோட்டம் அருகில் இருக்கக்கூடிய கிணற்றில் சுபஶ்ரீ இறந்து கிடந்தது தெரிய வந்திருக்கிறது. அவரது உடல் மீட்கப்பட்டு கோவை மருத்துவக் கல்லூரியில் மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 

சுபஶ்ரீயின் உடல் கணவர் பழனிக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டு, இந்த வழக்கு தொடர்பாக ஈஷா யோகா மையம் மற்றும் செம்மேடு பகுதிகளில், பதிவாகியிருக்கக்கூடிய கண்காணிப்பு கேமாராக்கள் பதிவுகள்,  சுபஶ்ரீ மற்றும் அவரது கணவரின் கைப்பேசிகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணையில் நிச்சயமாக உண்மை கண்டறியப்படும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments