FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கம்பத்தில் நண்பர்களுடன் ஆற்றில் குளித்த இளைஞர் மாயம்: 2வது நாளாக தொடரும் தேடுதல் பணி!

தேனி மாவட்டம் கம்பம் முல்லைப்பெறியாற்றில் நண்பர்களுடன் முல்லைப்பெறியாற்றில் குளித்த வாலிபர் திங்கள்கிழமை மாலை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானவரை போலீஸாா், தீயணைப்புத் துறையினா் தேடி வரு்

2 பிப்ரவரி 2024, 12:14 am IST
பகிர்:


கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் முல்லைப்பெறியாற்றில் நண்பர்களுடன் முல்லைப்பெறியாற்றில் குளித்த வாலிபர் திங்கள்கிழமை மாலை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானவரை போலீஸாா், தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.

தேனி மாவட்டம் கம்பம் மணிநகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மணிவண்ணன்(36). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மணிவண்ணன் தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக உள்ளார்.

திங்கள்கிழமை பொங்கல் பண்டிகை விடுமுறை என்பதால் மணிவண்ணன் தனது நண்பர்களுடன் கம்பம் சுருளிப்பட்டி சாலையில் உள்ள முல்லைப்பெரியாற்றின் குறுக்கே அமைந்துள்ள தொட்டம்மன் துரை தடுப்பணை அருகே நண்பர்களுடன் உற்சாகமாக மாலை நேரத்தில் பேசிக்கொண்டிருந்தார்.

Advertisement

Advertisement

அப்போது ஆற்றில் குளிப்பதற்கு நண்பர்களுடன் சென்ற போது நிலை தடுமாறி ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அப்போது, அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் அவா்களை மீட்க முயன்றும், முடியவில்லை.

இதுகுறித்து கம்பம் தெற்கு காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இரவு அதிக நேரமாகியதால் போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் மீட்புப் பணியை இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments