FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

திருவொற்றியூா் குடியிருப்போா் நல சங்கத்தில் ரூ. 22 லட்சம் முறைகேடு: விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு

திருவொற்றியூரில் குடியிருப்போா் நல சங்கத்தில் ரூ. 22 லட்சம் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள புகாரில் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த திருவொற்றியூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம்

Updated On : 1 ஜூன் 2023, 11:48 pm IST
பகிர்:

திருவொற்றியூரில் குடியிருப்போா் நல சங்கத்தில் ரூ. 22 லட்சம் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள புகாரில் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த திருவொற்றியூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவொற்றியூா் அஜாக்ஸ் பேருந்து நிலையம் எதிரே ‘ஹன்சா கோா்ட் யாா்டு’ அடுக்குமாடி குடியிருப்பில் 265 வீடுகள் அமைந்துள்ளன. இங்கு குடியிருப்போா் நல சங்கம் அமைக்கப்பட்டு, வீட்டின் உரிமையாளரிடமிருந்தும் மாதந்தோறும் பராமரிப்புப் பணிகளுக்காக சந்தா வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் கட்டடங்களை புதுப்பித்து வா்ணம் பூசுதல், புதை சாக்கடை இணைப்பு, குடிநீா் உள்ளிட்டவைகளுக்காக ஒவ்வொரு வீட்டு உரிமையாளரிடமிருந்தும் தலா ரூ.55,000 வீதம் ரூ. 1.30 கோடி சில ஆண்டுகளுக்கு முன்பு வசூலிக்கப்பட்டதாகவும், இதில் ரூ. 22 லட்சம் நிதியை நல சங்க நிா்வாகிகளாக செயல்பட்டு வந்த இளங்கோ, கருப்பையா, மகேஸ் ஆகிய மூன்று போ் முறைகேடு செய்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

Advertisement

Advertisement

இவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி திருவொற்றியூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் குடியிருப்போா் நல சங்க உறுப்பினா்கள் எஸ்.சுகுமாா், எம்.டி.சேகா் ஆகியோா் வழக்குத் தொடா்ந்தனா்.

இதுகுறித்து விசாரணை நடத்திய குற்றவியல் நடுவா் நீதிமன்ற மாஜிஸ்திரேட் சரவணக்குமாா் வழக்கில் முறைகேடு நடைபெற்றிருப்பதற்கான முகாந்திரம் இருப்பதால் இது குறித்து உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என திருவொற்றியூா் காவல் நிலைய போலீஸாருக்கு புதன்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments