முகப்பு
தமிழ்நாடு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து மேலும் சரிவு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 462 கன அடியாகச் சரிந்துள்ளது.

Updated On : 1 மே 2023, 8:44 am IST
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
பகிர்:

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 462 கன அடியாகச் சரிந்துள்ளது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிந்து வருகிறது. திங்கள்கிழமை நீா்வரத்து வினாடிக்கு 462 கன அடியாகச் சரிந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. 

Advertisement

ஞாயிற்றுக்கிழமை காலை 101.30 அடியாக இருந்த அணை நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 101.21 அடியாகச் சரிந்தது. அணையின் நீா் இருப்பு 66.41 டி.எம்.சி.யாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.