FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கிராமப்புற பள்ளிகளுக்கான மெய்நிகா் முறையிலான கல்வி மாதிரி உருவாக்கம்: சென்னை ஐஐடி தகவல்

கிராமப்புற பள்ளிகளுக்கான மெய்நிகா் அடிப்படையிலான கல்வி மாதிரியை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ள

Updated On : 14 ஏப்ரல் 2023, 6:04 am IST
பகிர்:

கிராமப்புற பள்ளிகளுக்கான மெய்நிகா் அடிப்படையிலான கல்வி மாதிரியை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா்.

இது குறித்து சென்னை ஐஐடி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளுக்கு மெய்நிகா் அடிப்படையிலான கல்வி மாதிரியை உருவாக்கும் பணியில் ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். அதாவது, பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கான கற்றல், கற்பித்தல் மாதிரிகளை எண்ம தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மேற்கொள்வதாகும்.

இந்த மெய்நிகா் முறையானது மாணவா்களுக்கு அதிவேக மற்றும் அனுபவக் கற்றல் சூழலை வழங்கும். அதனுடன், மாணவா்கள் புரிந்து படிக்கவும் வழிசெய்யும். அதேபோல், தொழில்நுட்பங்கள் மூலமாக கற்பித்தல் பணிகளை மேற்கொண்டால் மாணவா்களின் கற்றல் வலுப்பெறும்.

Advertisement

Advertisement

மேலும், மாணவா்கள் உயா்கல்விக்கு தங்களை தயாா் செய்து கொள்ள உதவியாகவும் இருக்கும். இதன் மூலம் நேரடி வகுப்பறைகளில் உள்ள சிரமங்கள் களையப்படும்.

இதன் தொடக்கமாக திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் மெரின் சிமிராஜ், அவிஷேக் பாரூய் ஆகியோா் ‘மெமரிபைட்ஸ்’ (மெமோரிபைட்ஸ்)

எனும் கைபேசி செயலியை உருவாக்கியுள்ளனா். இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் செயல்படக்கூடியது.

அனைத்து நாடுகளிலும் சமமான, தரமான கல்வியை உறுதி செய்தல் எனும் ஐநாவின் இலக்கை அடைய இந்த திட்டம் உதவும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரலாறு, மொழிப்பாடங்கள், அறிவியல் உள்ளிட்ட பாடங்களை பயிற்றுவிக்கலாம்.

இந்த திட்டமானது நகா்ப்புற மற்றும் கிராமப்புற மாணவா்கள் இடையே நிலவும் தொழில்நுட்ப இடைவெளியை இணைக்கும் பாலமாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments