ஆக. 25 முதல் அனைத்துப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
தமிழக அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் வருகிற ஆகஸ்ட் 25 முதல் அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
தமிழக அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் வருகிற ஆகஸ்ட் 25 முதல் அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அனைத்து தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து!
அதன்படி, தற்போது, 1,978 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் வருகிற ஆகஸ்ட் 25 முதல் அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், திருக்குவளையில் இந்த திட்டத்தினை தொடங்கிவைக்கிறார்.
இந்தத் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் நகா்ப்புற, கிராமப்புறப் பகுதிகளில் செயல்படும் 31,008 அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் 15 லட்சத்து 75 ஆயிரத்து 900 மாணவ, மாணவியா் பயன்பெறுவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.