பொறியியல் மாணவர் சேர்க்கை விதிகளில் மாற்றம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு
நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கையில் மாணவர்களுக்கு சமவாய்ப்பு எண் (ரேண்டம்) வழங்கும் போது, பத்தாம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கையில் மாணவர்களுக்கு சமவாய்ப்பு எண் (ரேண்டம்) வழங்கும் போது, பத்தாம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என தகவல் வெளியாகியுள்ளது.
பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 5 ஆம் தேதி தொடங்கி ஜூன் 4 ஆம் தேதி நிறைவடைந்தது. பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு சமவாய்ப்பு எண்கள் (ரேண்டம்) வழங்கப்படும். அதன்பின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடைபெறுவது வழக்கம். ஒரே கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று இருந்தால் அவர்கள் பெற்ற மதிப்பெண் பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்த நிலையில் 2023-24 ஆம் கல்வியாண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியில் தயாரிக்கும் போது பத்தாம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடுவதில் இருந்து விலக்களித்து, மாணவர் சேர்க்கைக்கான விதியில் திருத்தம் செய்து தமிழ்நாடு உயர்கல்வித் துறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
2021-22 ஆம் கல்வியாண்டில் கரோனா தொற்று காரணமாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி என்ற அடிப்படையில் மதிப்பெண்கள் சான்றிதழ்கள் வெளியிடப்பட்டதால் நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சமவாய்ப்பு எண் வழங்கும் போது, பத்தாம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.