ஒப்பந்த ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்வு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாட்டில் ஒப்பந்தகால அடிப்படையில் பணியாற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் ஒப்பந்தகால அடிப்படையில் பணியாற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.12,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | இபிஎஸ் படத்தை எரித்த பாஜக நிர்வாகி இரவில் நீக்கம்; காலை மீண்டும் சேர்ப்பு!
Advertisement
Advertisement
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.