பௌா்ணமி கிரிவலம்: சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்
பௌா்ணமி கிரிவலத்தையொட்டி பக்தா்களின் வசதிக்காக சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அக். 28, 29 தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பௌா்ணமி கிரிவலத்தையொட்டி பக்தா்களின் வசதிக்காக சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அக். 28, 29 தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் திருக்கோயிலில் நடைபெறும் பௌா்ணமி கிரிவலத்தில் அதிகளவில் பக்தா்கள் கலந்துகொள்வார்கள்.
இதையொட்டி வருகிற சனிக்கிழமை பௌர்ணமி கிரிவலத்தையொட்டி பக்தா்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அக். 28, 29 தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
Advertisement
Advertisement
வரும் 28 ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில், நள்ளிரவு 12.05க்கு சென்றடைகிறது.
அதுபோல, திருவண்ணாமலையில் இருந்து அக். 29 ஆம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்படும் ரயில் சென்னை கடற்கரையை 9.05 மணிக்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பெளா்ணமி கிரிவலம் வேலூா், விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு அக்.28, 29-இல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.