செப். 4ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
சென்னையில் வருகிற செப்டம்பர் 4 ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னையில் வருகிற செப்டம்பர் 4 ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செப்டம்பர் 4 (திங்கள்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
இதில் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | ஒரே நாடு, ஒரே தேர்தல்: சிறப்புக்குழு அமைத்தது மத்திய அரசு!
முன்னதாக, மதுரையில் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி மிக பிரம்மாண்ட அளவில் அதிமுக மாநாடு நடைபெற்றது. இதில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக தற்போது அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.