தொடர் விடுமுறை: தாம்பரம் - திருச்சி இடையே செப்.30ல் சிறப்பு ரயில்
இந்த வார இறுதியில் தொடர்ச்சியான விடுமுறை காரணமாக தாம்பரம் - திருச்சி இடையே நாளை மறுநாள் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த வார இறுதியில் தொடர்ச்சியான விடுமுறை காரணமாக தாம்பரம் - திருச்சி இடையே நாளை மறுநாள் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
வரும் 30 ஆம் தேதி தாம்பரத்தில் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, திருச்சியை மறுநாள்(அக்.1) காலை 6.10 மணிக்கு திருச்சி சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மறுவழித்தடத்தில், திருச்சியில் இருந்து அக். 1 ஆம் தேதி இரவு 10.45 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள்(அக்.2) காலை 6.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: முதல்வர் வேட்பாளர் விவகாரத்தால் கூட்டணி முறிவு: ஓபிஎஸ் அணி
இதற்கான முன்பதிவு இன்று(செப்.28) தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.