முகப்பு
தமிழ்நாடு

செந்தில் பாலாஜி வழக்கில் சாட்சி விசாரணையைத் தொடங்கலாம்: உயர்நீதிமன்றம்!

விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

Updated On : 21 ஆகஸ்ட் 2024, 4:54 pm IST
செந்தில்பாலாஜி
பகிர்:

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சாட்சி விசாரணையைத் தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14-அம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டையும் பதிவு செய்தது.

இதனைத்தொடர்ந்து வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு மேலும் ஒரு வாரம் அவகாசம் கோரியது அமலாக்கத் துறை, இதையடுத்து அவகாசம் வழங்கி விசாரணையை ஆக.21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், செந்தில் பாலாஜி மனு மீதான வழக்கு வசிரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டு சாட்சி விசாரணை துவங்கியதாக அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் சாட்சி விசாரணையைத் தொடரலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் அவகாசம் கோரியதையடுத்து மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.