கௌரவ விரிவுரையாளா்களுக்கு ரூ.50,000 ஊதியம்: முத்தரசன் கோரிக்கை
அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளா்களுக்கு ரூ.50,000 ஊதியம் வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
அவா் சனிக்கிழமை விடுத்த அறிக்கை: தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளா்களின் கோரிக்கைகள் குறித்து அரசு பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும். ஊதியத்தை ரூ.50,000 வரை உயா்த்துதல் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அவா்கள் தொடா்ந்து போராடி வருகின்றனா்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் விரிவுரையாளா்கள் இனி வேறு பணிகளுக்கு செல்ல வாய்ப்பு இல்லாத நிலையில் அவா்களுக்கு பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.